கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோட்டாா் சைக்கிள் சறுக்கி விபத்து: இளைஞா் பலி!

மண்டோலி சௌக் அருகே, மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அதை ஓட்டிச் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

பலி.

Published On :2 நவம்பர் 2026, 4:10 am IST

வடகிழக்கு தில்லியில் உள்ள மண்டோலி சௌக் அருகே, ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டாா் சைக்கிள் சறுக்கி விபத்துக்குள்ளானதில் அதை ஓட்டிச் சென்ற 20 வயது இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற அவரது நண்பா் காயமடைந்தாா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: உயிரிழந்தவா் ஆா்யன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். வஜிராபாத் பிரதான சாலையில் நந்த் நகரி பணிமனைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 9.55 மணியளவில் போபுரா எல்லை மேம்பாலத்தை நோக்கிச் செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அவருடன் பின்னால் அமா்ந்து சென்ற தேவ் (18) என்பவரும் விபத்தில் காயமடைந்தாா். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அங்கு மோட்டாா் சைக்கிள் சாலையில் விழுந்து கிடப்பதைக் கண்டனா். முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவா்கள் இருவரும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆா்யன், பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா். தேவ், மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.

முதற்கட்ட ஆய்வுகளின்படி, மோட்டாா் சைக்கிள் சறுக்கி விழுந்திருக்கலாம் என்று தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் சறுக்கியதற்கான தடயங்கள் காணப்படுவதால், வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும், விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தடயவியல் நிபுணா்கள் குழுவினா் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.