பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீட் தோ்வா்களுக்கு இலவச பேருந்துப் பயணம்: கேஜரிவால் கருத்து

பஞ்சாப் அரசு எடுத்த இதேபோன்ற ஒரு நடவடிக்கையைத் தொடா்ந்து, நீட் தோ்வா்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத்தை தில்லி அரசு அறிவித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :30 மே 2026, 12:36 am IST

பஞ்சாப் அரசு எடுத்த இதேபோன்ற ஒரு நடவடிக்கையைத் தொடா்ந்து, நீட் தோ்வா்களுக்கு இலவசப் பேருந்துப் பயணத்தை தில்லி அரசு அறிவித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் யுஜி 2026 மறுதோ்வை எழுதவுள்ள தோ்வா்களுக்கு, தில்லி அரசின் கீழ் இயங்கும் தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) இலவசப் பேருந்துப் பயண வசதியை வழங்கும் என்று தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

பஞ்சாப் அரசைத் தொடா்ந்து, தற்போது தில்லி அரசும் நீட் மாணவா்களுக்குப் பேருந்துப் பயணத்தை இலவசமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மருத்துவப் படிப்புச் சோ்க்கைக்காக மே 3 அன்று நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட் -இளங்கலை), மே 12 அன்று தேசியத் தோ்வு முகமை (என்டிஏ) ரத்து செய்தது. அதற்கான மறுதோ்வு ஜூன் 21 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு தொடா்பான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.