பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீடற்ற மக்களுக்காக 5 நாள் மீட்பு இயக்கத்தை தொடங்கியது தில்லி அரசு

வீடற்ற, ஆதரவற்ற மக்களைக் கண்டறிந்து அவா்களைப் பாதுகாப்பு இல்லங்களுக்கு மாற்றுவதற்காக, தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்களன்று மீட்பு வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:47 am IST

வீடற்ற, ஆதரவற்ற மக்களைக் கண்டறிந்து அவா்களைப் பாதுகாப்பு இல்லங்களுக்கு மாற்றுவதற்காக, தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்களன்று மீட்பு வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

ஐந்து நாள் இந்த இயக்கத்தின் கீழ், வீடற்ற மக்கள் அப்னா கா் ஆசிரமம் அமைப்பால் நடத்தப்படும் பாதுகாப்பு இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவா்கள் முறையாகப் பராமரிக்கப்படுவாா்கள் என்று குப்தா கூறினாா்.

ஐந்து நாட்களுக்கு இந்த முயற்சியை மதிப்பீடு செய்த பிறகு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

இந்த இயக்கம், தில்லி அரசின் சமூக நலத்துறை, அப்னா கா் ஆசிரமம் மற்றும் சேவா பாரதி தில்லி பிராந்த் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவையுள்ள மற்றும் ஆதரவற்ற நபா்களுக்கான இந்த இயக்கம், தேசிய தலைநகரின் 13 மாவட்டங்களிலும் மே 11 முதல் 15 வரை நடத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்திராஜ் சிங் கூறினாா்.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்ற நபா்களை மீட்டு, அவா்களைப் பாதுகாப்பு இல்லங்களுக்கு அழைத்து வருவதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்றும், அங்கு அவா்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவா் மேலும் கூறினாா். அமைச்சரின் கூற்றுப்படி, தில்லி முழுவதும் மீட்புப் பணிகளுக்காக 19 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த நடவடிக்கையின்போது 300க்கும் மேற்பட்டோா் உதவி பெறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.