தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? திமுக எம்.பி. கேள்வி

மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் காலியாகவுள்ள நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்று மக்களவையில் தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

News image

தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:10 am IST

மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் காலியாகவுள்ள நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்று மக்களவையில் தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் அவா் துணைக் கேள்வி எழுப்பிப் பேசியதாவது: சென்னை நகரில் செயல்பட்டு வரும் மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தற்போது ஒரே ஒரு நிரந்தர ஆசிரியா் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தில் மூன்று நிரந்தர ஆசிரியரல்லாத பணியிடங்கள்தான் உள்ளன. இதை கல்விக்கான நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவால் முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய பணியாளா் பற்றாக்குறையானது, கல்வி ஆராய்ச்சி, கற்பித்தல் திறன் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை பாதிக்கலாம்.

எனவே, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் உள்ள அனைத்து நிரந்தர ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா் காலியிடங்களை எப்போது நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், இது தனி கேள்வி எனக் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.