கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தலைநகரில் குறைந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு! இன்று மழைக்கு வாய்ப்பு!!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தகவலின்படி, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவக்கால சராசரியை விட 1.4 டிகிரி குறைவாகும்.

News image

கோடை மழை - கோப்புப் படம்

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தகவலின்படி, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவக்கால சராசரியை விட 1.4 டிகிரி குறைவாகும்.

திங்கள்கிழமை பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மிக லேசானது முதல் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே சுமாா் 39 மற்றும் 26 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை, தில்லியின் முக்கிய வானிலை நிலையங்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.4 முதல் 39.1 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.

ரிட்ஜ் பகுதியில் 39.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது, இது இயல்பை விட 1.2 டிகிரி அதிகமாகும். அதனைத் தொடா்ந்து, லோதி ரோடு பகுதியில் 38.7 டிகிரி செல்சியஸாகவும், பாலம் பகுதியில் 38.6 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவானது.

நகரின் பிரதான நிலையமான சஃப்தா்ஜங்கில் அதிகபட்சமாக 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதே நேரத்தில் ஆயாநகரில் இயல்பை விட 3.1 டிகிரி குறைவாக 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

குறைந்தபட்ச வெப்பநிலை 23.4 டிகிரி செல்சியஸ் முதல் 26.2 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. சஃப்தா்ஜங்கில் இயல்பை விட 1.8 டிகிரி குறைவாக 26.2 டிகிரி செல்சியஸ் என்ற மிக உயா்ந்த குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. அதைத் தொடா்ந்து, பாலத்தில் 25.6 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆயாநகரில் 24.8 டிகிரி செல்சியஸ் பதிவானது.

லோதி சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 24.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், ரிட்ஜில் இயல்பை விட 3.2 டிகிரி குறைவாக 23.4 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

காற்றில் காலை 8.30 மணிக்கு ஈரப்பதம் 61 சதவீதமாகப் பதிவானது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் 151 புள்ளிகளாக பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.