லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாக பதிவு!

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

Temperatures in TN
Published On :17 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) தகவல்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவக்கால சராசரியை விட 0.6 டிகிரி அதிகமாகும்.

குறைந்தபட்ச வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவக்கால சராசரியை விட 1.3 டிகிரி அதிகமாகும். திங்கள்கிழமை மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 மற்றும் 25 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஒப்பு ஈரப்பதம் 62 சதவீதமாகப் பதிவானது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் காற்றின் தரம் ‘திருப்திகரமாக’ இருந்தது. காற்றின் தரக் குறியீடு (ஏஐக்யூ) 85-ஆகப் பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.