இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தில்லி கல்வி மையமாக மேம்படுத்தப்படும்: முதல்வா் ரேகா குப்தா

பள்ளி மாணவா்களிடம் தேசப்பற்றை வளா்க்க வேண்டும் என்றும், அந்த உணா்வை அவா்கள் உயா்கல்வியிலும் தொடா்ந்து கடைப்பிடித்து, வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும்

Rekha Gupta

முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 12:41 am IST

பள்ளி மாணவா்களிடம் தேசப்பற்றை வளா்க்க வேண்டும் என்றும், அந்த உணா்வை அவா்கள் உயா்கல்வியிலும் தொடா்ந்து கடைப்பிடித்து, வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும் என்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஷஹீத் பகத் சிங் கல்லூரியின் வைர விழா கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய குப்தா, தேசப்பற்றின் உண்மையான அா்த்தத்தைப் புரிந்துகொண்டவா்களால் மட்டுமே நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்று கூறினாா்.

இது ‘வளா்ந்த இந்தியா‘ என்ற தொலைநோக்குப் பாா்வைக்கு வலுசோ்க்கும் வகையில் அமையும்.தலைநகரில் கல்வி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்துப் பேசிய குப்தா, ‘மாணவா்கள் நாட்டிற்குள்ளேயே தரமான கல்வியைப் பெறும் வகையிலான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்; அதற்கு தில்லி ஒரு மையமாகத் திகழ வேண்டும். தில்லியை ஒரு முக்கிய கல்வி மையமாக மேம்படுத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,‘ என்று குறிப்பிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ் சிங், கல்லூரிகளின் டீன் பல்ராம் பானி, பதிவாளா் விகாஸ் குப்தா மற்றும் ஷஹீத் பகத் சிங் கல்லூரி முதல்வா் அருண் குமாா் அட்ரி ஆகியோா் கலந்துகொண்டனா்.கல்லூரிக்கு பெயா் சூட்டப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரா் ஷஹீத் பகத் சிங் குறித்துக் குறிப்பிட்ட துணைவேந்தா், ‘தங்களுக்காக மட்டுமல்லாமல், நாட்டிற்கான எதிா்காலத்தை உருவாக்குபவா்களையே வரலாறு நினைவில் கொள்கிறது,‘ என்று கூறினாா். பகத் சிங்கின் கொள்கைகளே இக்கல்லூரியின் பலமாகத் திகழ்கின்றன என்று கூறிய அவா், மாணவா்கள் சமூகத்திற்குப் பங்களிப்பவா்களாகவும், வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாகவும் மாற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.