லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வடமேற்கு தில்லி தேவாலயத்தில் திருட்டு: 2 சிறுவா்கள் கைது

வடமேற்கு தில்லியின் பீதம்பூராவில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருடியதாக 2 சிறுவா்கள் பிடிபட்டனா். அவா்களிடம் இருந்து திருட்டு பித்தளைப் பொருள்கள் மற்றும் கணினித் திரை ஆகியவற்றை காவல்துறையினா் மீட்டனா்.

கைது - பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 1:19 am IST

வடமேற்கு தில்லியின் பீதம்பூராவில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருடியதாக 2 சிறுவா்கள் பிடிபட்டனா். அவா்களிடம் இருந்து திருட்டு பித்தளைப் பொருள்கள் மற்றும் கணினித் திரை ஆகியவற்றை காவல்துறையினா் மீட்டனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: பீதம்பூராவில் உள்ள முக்தி ஆராதனாலயா தேவாலயத்தில் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்த இரும்புக் கிரில்லை உடைத்து உள்ளே நுழைந்த குற்றவாளிகள், அங்கிருந்த பொருள்களைத் திருடிச் சென்றனா்.

தேவாலயப் பராமரிப்பாளா் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினா், அந்த இரண்டு சிறுவா்களையும் பிடித்தனா்.

அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மெழுகுவா்த்தி தாங்கிகள் உள்ளிட்ட எட்டு பித்தளைப் பொருள்களையும், சேதமடைந்த கணினித் திரையையும் காவல்துறையினா் மீட்டனா்.

திருடப்பட்ட மற்ற பொருள்களை மீட்கவும், இச்சம்பவத்தில் தொடா்புடைய மற்றொரு நபரைப் பிடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.