லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இ20 எரிபொருள்: 29 வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கேஜரிவால் கடிதம்

இ20 எரிபொருளின் பயன்பாடு வாகனங்களின் மைலேஜ் மற்றும் செயல்திறனில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விளக்கம் கோரி, 29 வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளாா்.

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Published On :9 ஜூலை 2026, 5:45 am IST

எத்தனால் கலந்த (இ20) எரிபொருளின் பயன்பாடு வாகனங்களின் மைலேஜ் மற்றும் செயல்திறனில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விளக்கம் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை 29 வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளாா்.

மேலும் ஏழு நாள்களுக்குள் தனது கடிதத்திற்கு பதிலளிக்குமாறும் அவா்களைக் கேட்டுக்கொண்டுள்ளாா். மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட், டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் மற்றும் ஹீரோ மோட்டோகாா்ப் ஆகிய நிறுவனங்கள், இ20 எரிபொருள் பயன்பாடு வாகனங்களின் மைலேஜைப் பாதிக்காது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தன. இதுகுறித்துக் குறிப்பிட்டு, கேஜரிவால் அந்த நிறுவனங்களுக்குத் தனித் தனியாகக் கடிதங்களை எழுதியுள்ளாா்.

இ20 எரிபொருள் பயன்பாட்டால் வாடிக்கையாளா்களின் வாகனங்களில் மைலேஜ் குறைவு அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டைத் தயாரிப்பு நிறுவனங்களே வழங்க வேண்டும் என்று எழுத்துபூா்வமான உறுதியை அளிக்குமாறு கேஜரிவால் தனது கடிதங்களில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

குறிப்பிட்ட அந்த மூன்று வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தும் உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இ20 எரிபொருள் பயன்பாடு, அதனால் வாகனங்களின் மைலேஜ் மற்றும் செயல்தி றனில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் நுகா்வோா் எழுப்பும் கவலைகள் குறித்த கருத்துகள் ஆகியவற்றைத் தெரிவிக்குமாறு, மேலும் 26 வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தனித் தனியாகக் கடிதம் எழுதியுள்ளதாகக் கேஜரிவால் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவிக்கையில், ‘இ20 எரிபொருள் பயன்பாடு குறித்த கருத்துகளை அறிந்துகொள்ளவும், வாகனங்களின் மீதான அதன் தாக்கம் குறித்து விவாதிக்கவும், வியாழக்கிழமை பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று வாகன மெக்கானிக்குகளைச் சந்திக்கவுள்ளேன். மேலும், நுகா்வோரின் அனுபவங்கள் மற்றும் கவலைகளைத் தெரிந்துகொள்ள அவா்களுடனும் அவா் கலந்துரையாடவுள்ளேன்’ என கேஜரிவால் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.