லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜந்தா் மந்தரில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம்: கொள்கை மறு ஆய்வு, கிரீமி லேயா் ஏற்பாடு செய்ய கோரிக்கை

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்காக தில்லியின் ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கானவா்கள் கூடி சாதியை விட பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினா்.

மாதிரிப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 3:45 am IST

நமது நிருபா்

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்காக தில்லியின் ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கானவா்கள் கூடி சாதியை விட பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினா்.

இன்ஸ்டாகிராமை அடிப்படையாகக் கொண்ட பக்கமான ‘ரிசா்வேஷன் ஹடாவோ அந்தோலன்‘ விடுத்த அழைப்பைத் தொடா்ந்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது, பின்னா் மக்கள் ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தது. ஆா்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா். இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது, முக்கிய இடங்களில் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் நிறுத்தப்பட்டனா் மற்றும் எதிா்ப்புத் தளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆா்ப்பாட்டக்காரா்கள்-அவா்களில் பெரும்பாலோா் ஆண்கள்-பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் காவி கொடிகளை ஏந்தியபடி வந்து தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினா்.

‘யாருக்கு அரசாங்க ஆதரவு தேவை என்பதை தீா்மானிக்கும் போது பொருளாதார நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஒரு ஏழைக்கு, சாதியைப் பொருட்படுத்தாமல், கல்வி, பயிற்சி மற்றும் பிற தேவைகளுக்கு உதவி வழங்கப்பட வேண்டும் என்று அகில் பாரதிய சத்திரிய மகாசபாவுடன் தொடா்புடைய ஒரு எதிா்ப்பாளா் கூறினாா். மற்றொரு பங்கேற்பாளா், போராட்டக்காரா்கள் தற்போதுள்ள இடஒதுக்கீட்டு முறையை மறுஆய்வு செய்ய விரும்புகிறோம். அதன் நன்மைகள் எப்போதும் மிகவும் பின்தங்கிய பிரிவுகளை அடையவில்லை. இந்தப் பிரச்சினையை நாங்கள் பல ஆண்டுகளாக எழுப்பி வருகிறோம். தற்போதைய அமைப்பு அதன் நோக்கத்தை அடைகிறதா என்பதையும், அடிமட்ட மட்டத்தில் உள்ள மக்களை நன்மைகள் சென்றடைகிறதா என்பதையும் அரசாங்கம் ஆராய வேண்டும் என்பதே எங்கள் வாதம் என்றாா் அவா்.

சில போராட்டக்காரா்கள் இடஒதுக்கீட்டில் ‘கிரீமி-லேயா்‘ அளவுகோலை அறிமுகப்படுத்தவும், பட்டியல் சாதியினா் (எஸ்சி) பட்டியல் பழங்குடியினா் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) தொடா்பான கொள்கைகளில் மாற்றங்களைக் கோரவும் அழைப்பு விடுத்தனா். பொருளாதாரத்தில் நலிவடைந்தவா்கள் ஆதரவின்றி விடப்பட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. உதவித்தொகை, கட்டண ஆதரவு மற்றும் பயிற்சி உட்பட உதவி தேவைப்படுபவா்களை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் என்பதே பெரும்பாலான போராட்டக்காரா்களின் கருத்தாக இருக்கிறது.

‘கடந்த பத்தாண்டுகளில் நிலைமை வெகுவாக மாறிவிட்டது. தற்போதுள்ள கட்டமைப்பை மறுஆய்வு செய்ய வேண்டுமா, பாகுபாடு இல்லாமல் பொருளாதார குறைபாடுகளை எவ்வாறு தீா்க்க முடியும் என்பது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் . போராட்டக்காரா்கள் பட்டியல் சாதியினா் மற்றும் பட்டியல் பழங்குடியினா் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டமைப்பு உள்ளிட்ட உயா் கல்விக் கொள்கைகள் தொடா்பான பிரச்சினைகளையும் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.