மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சருமம் வறண்டுபோக இதுதான் காரணம்! என்ன செய்யலாம்?

வறண்ட சருமம் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :17 மார்ச் 2026, 5:24 pm IST

வறண்ட சருமம் அல்லது தோல் அழற்சி ஏன் ஏற்படுகிறது? சரிசெய்ய என்ன செய்யலாம்?

உடலில் குறிப்பாக சருமத்தின் வெளிப்புற அடுக்கில் போதுமான ஈரப்பதம் இல்லாத காரணத்தினாலேயே சரும வறட்சி ஏற்படுகிறது.

உடலில் ஈரப்பதம், சருமத்தில் காணப்படும் இயற்கை எண்ணெய்த் தன்மை குறைவதால் ஏற்படுவதாகும். இதனைக் கவனித்து சரிசெய்யவில்லை எனில் தோல் அரிப்பு, வெடிப்பு என பல்வேறு தோல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தோல் அரிப்பு, இறுக்கம், தோல் இழுப்பது போன்ற உணர்வு, வெள்ளை செதில்கள் போன்று வருவது, சிவந்துபோதல் ஆகியவை இவற்றின் அறிகுறிகள்.

செய்ய வேண்டியவை

நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் ஆகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழங்களில் வெள்ளரிக்காய், தர்பூசணி, காய்கறிகளில் சுரைக்காய், பூசணிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாதாம், வால்நட், பால், கீரைகள் என உடலுக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

மாறாக, அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை தோல் அழற்சியை ஏற்படுத்தலாம்.

வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்கலாம். இரவு தூங்கும் முன்பாக சருமத்திற்கு எண்ணெய், மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். பகலில் வெயிலில் செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். செயற்கை ரசாயனங்கள் நிறைந்த அழகு தயாரிப்பு பொருள்களைத் தவிர்க்கவும்.

மிகவும் மோசமான நிலையில் சருமம் இருந்தாலோ அல்லது சருமத்தில் தொற்றுகள் ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. அதேபோல அதிக உணர்திறன் கொண்ட சருமம் கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தலாம்.

Summary

skin care: causes and treatment for dry skin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.