பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள் பயன்படுத்தலாமா?

சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்துவது பற்றி..

J-K: Srinagar woman turns love for cooking into cloud kitchen venture

சமையலறை

Published On :27 அக்டோபர் 2026, 4:30 pm IST

பொதுவாகவே வீடுகளிலும் பெரிய பெரிய சமையல் கூடங்களிலும் வெகு ஆண்டுகளாகவே அலுமினியப் பாத்திரங்களைத்தான் சமையலுக்குப் பயன்படுத்தும் போக்கு இருந்து வருகிறது.

வீடுகளில் தற்போது அலுமினியப் பாத்திரங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து சில்வர் பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், கடாய், இட்லி பாத்திரம், குக்கர் போன்றவற்றை பெரும்பாலும் அலுமினியத்தில் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம்.

அலுமினியப் பாத்திரங்களில் சமையல் செய்வது என்பது மிகவும் எளிதானது என்பதாலும், விலையும் மலிவானது என்பதாலும் பலரும் இதனை விரும்பு வாங்குகிறார்கள்.

அலுமினியப் பாத்திரங்களின் சிறப்பு

அலுமினியப் பாத்திரங்களின் முதல் சிறப்பே அதன் எடை. எவ்வளவு பெரிய பாத்திரங்களாக இருந்தாலும் எடை குறைவாகக் கிடைத்துவிடும். இதனால் அவற்றை பயன்படுத்துவது, சுத்தம் செய்வது, உணவுடன் சேர்த்து இறக்கி, ஏற்றுவது போன்றவை எளிது.

குறைந்த தீயிலிலேயே பாத்திரம் எளிதாக சூடாகிவிடும், அடிப்பிடிக்கும் பிரச்னை குறைவு போன்றவையும் அலுமினியத்தை தேர்வு செய்ய காரணங்களாகின்றன.

அதிக ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் இட்லி பாத்திரம், கடாய் போன்றவறை சற்று தடிமானாக வாங்கினாலும் விலை குறைவாகவே கிடைக்கும்.

ஒரே நேரத்தில் அதிக பாத்திரங்கள் வாங்கும்போது அலுமினியப் பாத்திரங்களை தெரிவு செய்தால் பட்ஜெட்டிலேயே செலவை முடித்துவிடலாம்.

ஆனால், அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கும்போது சில எதிர்மறை பிரச்னைகள் நேரிடும்.

புளி, எலுமிச்சை, அதிகம் உப்பு சேர்ந்த உணவுகளை அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உணவிலிருக்கும் அமிலத்தன்மை, பாத்திரத்தை பாதித்து, அந்த அலுமினியம் கரைந்து உணவில் கலக்கும் பேரபாயம் உள்ளது.

உணவில் கரையும் அலுமினியம், உடலுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்.

உணவில் கலக்கும் அலுமினியத்தை வடிகட்டும் பொறுப்பை கவனிக்கும் சிறுநீரகத்துக்கு உலோகத்தை வடிகட்டும் கூடுதல் வேலையால் பாதிப்பு ஏற்படும்.

அலுமினியத்தை, அதிகம் பயன்படுத்தும்போது, அதன் மேல் பகுதியில் சேதம் ஏற்பட்டு, தொடர்ச்சியாக உணவில் அலுமினியம் கரையும் ஆபத்தும் உள்ளது. எனவேதான் அலுமினியப் பாத்திரங்களை அதிக நாள்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.