தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஏர் கூலர் Vs ஏர் கண்டீஷனர்! வெய்யிலுக்கும் பணத்துக்கும் ஏற்றது எது?

ஏர் கூலர் - ஏர் கண்டீஷனர் இவற்றில் வெய்யிலுக்கும் பணத்துக்கும் ஏற்றது எது என்பது பற்றி..

News image

ஏர் கூலர் Vs ஏர் கண்டீஷனர்! - ANI

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

வெய்யில் காலத்தில் வெறும் மின் விசிறி காற்றால் நம்மை காக்க முடியாது என்ற போது ஏர் கூலர் அல்லது ஏர் கண்டீனர் போன்றவற்றை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

பலரும் ஏர் கூலர் வாங்கலாமா? ஏர் கண்டீஷனர்தான் வாங்க வேண்டுமா? எது விலை குறைவு, எது மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடுவார்கள்.

பொத்தாம்பொதுவாக சொல்வது என்றால், ஏர் கூலர்கள் விலை குறைவு, மின்சாரத்தையும் குறைவாகவே பயன்படுத்தும், பொருத்தும் பிரச்னை இருக்காது என்று சொல்லிவிடலாம். ஆனால், உண்மை அப்படித்தான் இருக்கிறதா? என்றால் இருக்காது.

உண்மையில் ஏர் கூலர், ஏர் கண்டீஷனர் தேர்வை முடிவு செய்வது, ஒருவரது தேவை, அறையின் அமைப்பு, பட்ஜெட், பயன்படுத்தும் முறை போன்றவைதான் உறுதி செய்கின்றன. ஒரு சிலருக்கு குளிர்சாதனக் கருவியே சரியாக இருக்கும். மற்றொரு அறைக்கு அது சரியாக இருக்காது.

இரண்டுக்குமே சாதக, பாதகங்கள் உள்ளன. இதில் எது சிறந்தது, எது விலை குறைவு என்று பார்ப்பதை விட, ஒவ்வொருவரும் தங்களுக்கு எது சிறந்தது என்பதைத்தான் பார்க்க வேண்டும். தேட வேண்டும்.

ஏர் கூலர் வாங்குபவர்களின் தேவை..

  • மிகக் குறைந்த செலவில் வாங்க வேண்டும் என்றால்,

  • மின் கட்டணம் அதிகரிக்கவே கூடாது என்ற கவலை உள்ளதென்றால்,

  • மிகவும் வறண்ட பகுதிகளில் வசிப்பவராக இருந்தால்,

  • எங்குச் சென்றாலும் எந்த அறைக்குச் சென்றாலும் தூக்கிச் செல்லும் வசதி வேண்டும் என்றால்,

  • ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நபருக்கு மட்டுமே குளிர் தேவைப்பட்டால் ஏர் கூலர் சிறந்த தேர்வு.

குளிர்சாதனக் கருவி வாங்க வேண்டும் என்றால்,

  • அறை முழுவதையும் குளிரூட்டுவது அவசியம்.

  • மின் கட்டணத்தை சமாளிக்கும் திறன் இருக்கிறது,

  • அதிக நேரம் ஒரே அறையில் பலரும் இருக்க வேண்டியது அல்லது உறங்க வேண்டிய தேவை.

  • பெரிய அறைக்குத் தேவைப்படும் என்றால் குளிர்சாதனக் கருவிதான் சரியான தேர்வாக இருக்கும்.

சிறந்த ஏர் கூலர்கள் ரூ.5,500 முதலே தற்போது கிடைக்கின்றன. சில தள்ளுபடிகளும் அறிவிக்கப்படுகின்றன. குளிர்சாதனக் கருவிகள் குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் விற்பனையில் உள்ளன.

ஏர் கூலர்கள், அந்த இயந்திரத்தில் ஊற்றப்படும் நீரை குளிர்ச்சியாக்கி காற்றில் தெளிப்பதன் மூலம் குளிர்ச்சியாக்குகிறது. சிறு நீர் துளிகள் ஆவியாகி, காற்றில் கலக்கும்போது ஏற்படும் குளிர் சிறிது நேரம் நீடிக்கும். பொதுவாகவே காற்றில் ஈரப்பதம் குறைந்த ஜெய்ப்பூர், தில்லி போன்ற பகுதிகளுக்கு ஏர் கூலர்கள் சிறந்து செயல்படும். ஏர் கூலர்களை சுத்தம் செய்வது, பராமரிப்பு எல்லாம் எளிமையானது.

அனைத்து சூழ்நிலைகளிலும் குளிர்சாதன பெட்டிகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் விலையும், மின்சார செலவும் அதிகம் என்பதால் சிலருக்கு இது சரியாக இருக்காது.

Summary

Air Cooler vs. Air Conditioner! Which is best for the heat and your budget?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.