தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு!

புறப்பட்டு 2 மணி நேரத்தில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் பற்றி..

News image

ஏர் இந்தியா விமானம் - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:03 pm IST

கேரளத்தின் கண்ணூரிலிருந்து ஜெட்டாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டும் கண்ணூர் விமான நிலையத்திற்கே திரும்பியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

180-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கண்ணூர் விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஆனால், சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, விமானத்தின் இயந்திரம் தொடர்பான எச்சரிக்கை விளக்கு எரிவதைக் கவனித்த விமானிகள், விமானத்தைத் திருப்ப முடிவு செய்தனர்.

விமானம் கண்ணூரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என வட்டாரங்கள் கூறியுள்ளன.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விமானத்தின் எரிபொருள் வடிகட்டியில் கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது.

தரையிறங்குவதற்கு முன்னதாக எரிபொருளின் அளவைக் குறைப்பதற்காக, அந்த விமானம் சிறிது நேரம் விமான நிலையத்தைச் சுற்றியே வட்டமடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

An Air India Express flight bound to Jeddah from Kannur returned within two hours of the flight on Tuesday due to a fault in the aircraft's engine, airport sources said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.