இரவு நேரங்களில் மட்டும் அதிகமாக குளிர்சாதனப் பெட்டியை இயக்குபவர்களுக்கு இன்வெர்ட்டர் ஏசிகள் நிச்சயம் பயனளிக்கும் என்றே கூறப்படுகிறது.
இன்வெர்ட்டர் ஏசிகள் இரவு நேரத்தில் குறைந்த எரிசக்தியில் இயங்கி, பெரும்பாலானோர் எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாக மிச்சம் பிடிக்கிறது என்றும் பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் இந்த டெக்னிக்கைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன என்பதால் இன்வெர்ட்டர் ஏசிகள் அதிகம் விற்பனையாகின்றன என்றும் தெரிகிறது.
இதுபற்றி இன்வெர்ட்டர் ஏசி விற்பனையாளர்கள் கூறுவது என்னவென்றால்,
இரவு சுமார் 10 மணியளவில் அறை இன்னும் சூடாக இருக்கும்போது, ஏசியை இயக்குகிறீர்கள். முதல் 30-40 நிமிடங்களுக்கு, வெப்பநிலையைக் குறைப்பதற்காக இன்வெர்ட்டர் கம்ப்ரசர் கடுமையாக செயல்படும்.
ஆனால் நள்ளிரவுக்குப் பிறகு, அறையை குளிரூட்டும் தேவை குறைந்துவிடும்.
காரணம் வெளிப்புற வெப்பநிலை பொதுவாகக் குறைந்துவிடும். அறையும் வெப்பநிலை குறைந்து காணப்படும். வெளியே வெய்யில் இல்லை. கம்ப்ரசருக்கு இனி அதிகபட்ச எரிசக்தி தேவையில்லை.
ஆனால், இந்த நிலையிலும், பழைய வகையான குளிர்சாதனப் பெட்டிகள் இரவு முழுவதும் தீவிரமாக மீண்டும் மீண்டும் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
ஒரு இன்வெர்ட்டர் ஏசியோ அவ்வாறு செயல்படுவதில்லை. மிகவும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி, மெதுவாக இயங்கி, அமைதியாக அறையின் வெப்பநிலையை தக்க வைக்கிறது.
இன்வெர்ட்டர் கம்ப்ரசர்கள் மிகக் குறைந்த வாட்டேஜ் அளவில் பல மணிநேரம் தொடர்ச்சியாக இயங்க முடியும். அதாவது பலரும் இதனைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள். இப்படித்தான் மின் சேமிப்பு நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நவீன இன்வெர்ட்டர் குளிர்சாதனப் பெட்டிகள் சிறந்ததா? ஏன்?

ஏசி வாங்கும்போது எரிசக்தி பயன்பாட்டை கவனிக்காவிட்டால்?

ஸ்மார்ட் ஏசி வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?

சம்மரை சமாளிக்க வாய்ஸ்-கன்ட்ரோலில் இயங்கும் ஏசி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

