தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விடுமுறைக்காலம்! வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

விடுமுறைக்காலத்தில் வெளியூர் செல்பவர்கள், வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது பற்றி..

News image

வீட்டின் பாதுகாப்பு - ANI

Updated On :15 ஏப்ரல் 2026, 5:46 pm IST

கோடைக்காலம் வந்துவிட்டாலே விடுமுறைக் காலமும் சேர்ந்துகொள்ளும். இந்த நேரத்தில் அதிகமானோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வது வழக்கம். எனவே வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய சில வழிமுறைகள் அவசியம்.

முதலில் பொதுவாக வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவரும் பொறுப்பும் அடங்கியிருக்கிறது.

அருகில்தானே செல்கிறோம் என்று நினைத்து சிலர் வீட்டின் கதவை மூடிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் வீட்டை பூட்டுவது அவசியம்.

வீடு கட்டும்போதே, தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீட்டின் மதில் சுவர்களை யாரேனும் தொட்டால் அலாரம் அடிக்கும் வசதிகளை ஏற்படுத்தலாம்.

வீட்டில் ஆள்கள் இல்லை என்றாலும், ஆள்கள் இருப்பது போல காட்டுவது அவசியம். வெளியிலிருந்தே வீட்டின் வெளிப்புற விளக்குகளை அணைக்கும் வசதியை வைத்துக் கொள்ளுங்கள்.

குறைந்த செலவில் வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி, செல்போன் மூலமாகவே வீட்டை கண்காணிக்கலாம்.

வீட்டில் கண்காணிப்புக் கேமரா அல்லது அலாரம் போன்றை பழுதானால் உடனடியாக அதனை சரி செய்து கொள்ளவும். சில வேலைகளில் அதுவும் திருடர்களின் சதியாக இருக்கலாம்.

வீட்டு வேலைக்காரர்களிடம் மற்றொரு சாவி இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஊரில் இல்லாத வேளையில் அவர்களிடம் மாற்று சாவியை வாங்கிக் கொள்வது நலம்.

வீட்டின் வாசலில், சாவியை மறைத்து வைப்பது எப்போதுமே நல்ல திட்டமல்ல.

இரவு நேரத்தில் ஆள்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக விளக்குகள் எரியாமல் இருப்பதைத் தடுக்க அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி மாலையில் விளக்குகளைப் போட்டு இரவில் அணைக்கக் கேட்டுக் கொள்ளலாம்.

வெளியில் செல்கிறோம் என்ற தகவலை முடிந்தவரை பக்கத்து வீட்டாருக்கு தெரிவித்துவிட்டுச் செல்ல வேண்டும். அப்போதுதான் இரவில் ஏதேனும் சப்தம் கேட்டாலும் அவர்கள் சென்று பார்க்க முடியும்.

வீட்டின் பாதுகாப்புக்காக நாய்களை வளர்ப்பது மிகவும் சிறப்பான வழிமுறை. அவற்றை நல்ல முறையில் பயிற்சி கொடுத்து வளர்த்தால் வீட்டுக்கு காவலே வேறு தேவையில்லை.

Summary

For those going abroad during the holidays, about ensuring the safety of their homes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.