பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது: உதயநிதி ஸ்டாலின்

கவர்ச்சி மாயஜாலத்தைக் காட்டி மக்களைச் சிலர் ஈர்த்திருக்காங்க. இந்த கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது என உதயநிதி பேசியிருப்பது...

News image

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். - கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 10:40 am IST

தஞ்சாவூர்: கவர்ச்சி மாயாஜாலத்தைக் காட்டி மக்களைச் சிலர் ஈர்த்திருக்காங்க. இந்த கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது, அடிப்படைப் பணிகளை நிறைவேற்றாது. எந்தப் பிரச்னைக்கும் அது தீர்வு காணாது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இல்ல திருமண நிகழ்ச்சி திங்கள்கிழமை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்

நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர், நம்முடைய தலைவர் கலந்து கொள்கின்ற முதல் நிகழ்ச்சி இது. ஒரு சாதாரண திருமண நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், நம்முடைய கட்சி நிகழ்ச்சியாக இன்றைக்கு மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யார் எந்த பக்கம் போனாலும், எந்த மாவட்டம் எந்த முடிவு எடுத்தாலும், டெல்டா எப்பொழுதுமே திமுக பக்கம்தான் என்பதை நிரூபிச்சு காட்டிய அத்தனை பேருக்கும் நன்றி.

​திருவாரூர் மாவட்டத்தில் திமுக வளர்வதற்கு உறுதியான அடிதளம் போட்டவர் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். அவரை நீங்க என்னைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டீங்க. திருவாரூர் மாவட்டம் மட்டும் இல்ல, ஒட்டுமொத்த டெல்டாவுமே இன்றைக்கு திமுகவின் கோட்டையாகத்தான் விளங்கி கொண்டிருக்கிறது.

​தமிழ்நாடு முழுக்க இது மாதிரியான லட்சக்கணக்கான திமுக குடும்பங்கள் இருப்பதால்தான் கட்சி எவ்வளவு பெரிய புயலைச் சந்தித்தாலும் நாம் திரும்பத் திரும்ப மீண்டும் எழுந்து வந்துகிட்டு இருக்கிறோம். இந்தத் திருமணத்தில் இருக்கக்கூடிய எழுச்சியையும் உங்களுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பார்க்கும்போது நிச்சயம் நம்முடைய தலைவர், நிச்சயம் திமுக மீண்டும் வெற்றி வாகைச் சூடும் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

​முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன மாதிரி, திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. அது ஒரு சமுதாய இயக்கம். நாம் தேர்தல் அரசியலில் தோல்வி அடைந்தாலும், கொள்கை அரசியலில் தோற்க மாட்டோம், தோற்கவிடவும் மாட்டோம். வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். மற்ற கட்சிகளைத்தான் அவை பாதிக்கும். சமுதாய இயக்கமான திமுக எப்போதும் போல மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்யும். ​

எதிர்க்கட்சியா, நமக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே நாம் உழைப்போம். தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்துகளை எல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம். இந்த பத்து நாள்களிலேயே மக்கள், பல பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சியுடைய உண்மையான முகத்தை உணர்ந்திருப்பாங்க. போகப் போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும்.

​முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன ஒரு உதாரணத்தை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். தாயின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய ஒரு குழந்தை, கிலுகிலுப்பை ஆட்டி வசிகரிக்கும் ஒரு ஆளைப் பார்த்து நிச்சயம் மயங்கும், மகிழ்ச்சியடையும். தாய்கிட்ட இருந்து தாவி அந்த கிலுகிலுப்பை ஆட்டுறவன்கிட்ட கொஞ்ச நேரம் போய் உட்காந்துக்கும். ஆனா அந்தக் குழந்தை கிலுகிலுப்பை காட்டுறவன்கிட்ட நிரந்தரமா இருந்திடாது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அதுக்கு உண்மையான பாசம்னா என்னன்னு தெரியும். தாயோட முகத்தை நிச்சயம் தேடிப் பார்க்கும். தாய்கிட்டத்தான் மீண்டும் திரும்பி வரும். ​அதுபோன்று இப்ப கவர்ச்சி, மாயஜாலத்தைக் காட்டி மக்களைச் சிலர் ஈர்த்திருக்காங்க. இந்த கவர்ச்சி மக்களுடைய கஷ்டத்தைப் போக்காது. அடிப்படைப் பணிகளை நிறைவேற்றாது. வளர்ச்சியை பெற்று தராது. எந்தப் பிரச்னைக்கும் அது தீர்வு காணாது. எனவே தாயோட அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை அந்த குழந்தை மீண்டும் உணர்ந்து, தமிழ்நாட்டுக்குத் தாயாக இருக்கக்கூடிய நம்முடைய கட்சியை, நம்முடைய தலைவரை நோக்கி அந்தக் குழந்தை நிச்சயம் விரைவில் வரும். நம்முடைய தலைவர் சொன்னது போன்று சூரியன் ஒருபோதும் மறையாது, அது மறுபடியும் உதிக்கும். அதன் ஒளியில தமிழ்நாடு மீண்டும் செழிக்கும் என்றார்.

Summary

Some individuals have captivated the public by employing the magic of glamour. Udhayanidhi stated that this glamour will not alleviate the people's hardships.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.