இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...

News image

துருக்கி விமானத்தில் தீ விபத்து - X

Updated On :11 மே 2026, 11:31 am IST

துருக்கியில் இருந்து வந்த விமானம் நேபாளத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நேபாளத்துக்கு வந்த துருக்கி ஏர்லைன் விமானம்(டிகே 726) காத்மாண்டு விமான நிலையத்தில் இன்று காலை 6.45 மணிக்கு தரையிறங்கியபோது திடீரென விமானத்தின் டயரில் தீ பிடித்தது.

இந்த விமானத்தில் 277 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 11 ஊழியர்கள் என மொத்தம் 288 பேர் பயணித்துள்ளனர்.

விமானத்தின் டயரில் தீ பற்றியதையடுத்து உடனடியாக விமானத்தில் உள்ள அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் எமெர்ஜன்சி கதவுகள் வழியாக பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் லேசான காயத்துடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசரகால நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் இதில் பயணித்துளினது குறிப்பிடத்தக்கது.

Summary

Turkish Airlines plane tyre catches fire during landing in Nepal's Kathmandu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.