இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்றைய வணிக நாளின் (மே 7) முடிவில் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 114 புள்ளிகளும் நிஃப்டி 24,326 புள்ளிகளுடனும் நிறைவு பெற்றது. ஐடி, ஆட்டோ துறை பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77,942 புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 78,384.70 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக சரிந்து வணிக நேர முடிவில் 114 புள்ளிகள் சரிந்து 77,952 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. ஒட்டுமொத்த இன்றைய வணிகத்தில் இது 0.15% சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24,398 புள்ளிகளுடன் தொடங்கியது. வணிக நேர மத்தியில் அதிகபட்சமாக 24,482 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக சரிந்து 24,330 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது. இன்றைய ஒட்டுமொத்த வணிகத்தில் இது 0.018% சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் மொத்தம் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.
அதிகபட்சமாக கோத்ரேட்ஜ் பங்குகள் 2.12% உயர்ந்திருந்தது. என்டிபிசி 1.40%, டாடா ஸ்டீல் 0.76%, கோட்டாக் வங்கி 0.75%, எடர்னல் 0.54%, ஏசியன் பெயின்ட்ஸ் 0.47%, அல்ட்ராடெக் சிமெண்ட் 0.44%, எல்&டி 0.37%, மாருதி சுசூகி 0.35% உயர்ந்துள்ளது.
இதேபோன்று குவாலிட்டி வால்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனி, ஐடிசி, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் எச்டிஎஃப்சி லைஃப், பஜாப் ஆட்டோ, எம்&எம், என்டிபிசி, சன் பார்மா, ஓஎன்ஜிசி, அப்போலோ ஹாஸ்பிட்டல், ஹிண்டல்கோ, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் போன்றவை உயர்ந்திருந்தன.
Summary
Stock market Sensex, Nifty Close Lower! IT and Auto Sector Stocks Decline
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 356, நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


