1952 முதல் தற்போது வரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகுடம் சூடி நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் வரிசையில் திமுக தலைவர் கருணாநிதி இருக்கிறார்
1952-இல் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் மெட்ராஸ் மாகாணத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்றார்.
குலக்கல்வித் திட்டத்திற்கு பெரும் எதிப்புகள் எழுந்ததை அடுத்து முதல்வர் ராஜாஜி, தனது பதவியை ராஜிநாமா செய்த பிறகு, காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து காமராஜர் தொடர்ந்து 3 முறை முதல்வராக 9 ஆண்டுகள் இருந்தார்.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலுவிழந்து வந்ததையடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்கிற காமராஜர் திட்டத்தின் கீழ்(கே-திட்டம்) 1963 இல் காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து 1967-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் அறிஞர் அண்ணா. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். புற்றுநோயால் பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்த அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து 1971 பேரவைத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்த நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.
இதனிடையே, திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக எனும் புதிய கட்சி தொடங்கி எம்ஜிஆர் 1977 பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றார். 1980, 1984 பேரவைத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்ற எம்ஜிஆர் சுமார் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1991 பேரவைத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்று முதல்முறையாக ஜெயலலிதா முதல்வரானார். 14 ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக இருந்த ஜெயலலிதா, டான்சி வழக்கு மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளால் இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்தார். இருப்பினும், 2011-க்குப் பிறகு 2016 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவரான மு.க. ஸ்டாலின், 2021 பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று கூறி பதவியேற்றது தமிழக அரசியலில் பெரும் பேசும்பொருளானது.
இதையடுத்து தமிழகத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்கள் பட்டியலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், காமராஜர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
Summary
Who was the Chief Minister who ruled Tamil Nadu for the longest period?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெற்றிக் கழகத்தின் வெற்றி!

நீண்ட கால பிரதமா்: சாதனை படைத்தாா் மோடி! உலகத் தலைவா்கள் வாழ்த்து

உலகளாவிய வளா்ச்சியின் உந்துசக்தி: பிரதமா் மோடிக்கு நிதீஷ் குமாா் புகழாரம்

மக்களாட்சியில் நீண்டகால பிரதமா்: நேருவை விஞ்சுகிறாா் பிரதமா் மோடி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

