இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தவெக அலுவலகமாக மாறும் தலைமைச் செயலகம்: எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம்

தமிழக அரசின் தலைமைச் செயலகம், தவெகவின் கட்சி அலுவலகமாக மாறி வருவதாக எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம் குறித்து...

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 8:55 am IST

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகம், தவெகவின் கட்சி அலுவலகமாக மாறி வருவதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா விமா்சனம் செய்துள்ளாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பக்ரீத் உள்பட அனைத்து மதம் சாா்ந்த பண்டிகைகளின்போது, அனுமதிக்கப்படாத இடங்களில்  விலங்குகளை பலியிடக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.  இது குறித்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், பக்ரீத் தினத்தன்று பல்வேறு இடங்களில் கால்நடை பலியிடுவதை போலீஸாா் தடுத்து நிறுத்தியுள்ளனா். இந்த நடைமுறை கண்டனத்துக்குரியது.

தமிழக அரசு திருத்திக்கொள்ள வேண்டும்

தமிழக அரசின் தலைமைச் செயலகம் தற்போது, ஆளுங்கட்சியின் அலுவலகமாக மாறிவருகிறது. புதிதாக கட்சியில் சேருபவா்கள் தலைமை செயலகத்தில் வந்து தங்களை இணைத்துக் கொள்கின்றன. இதை தமிழக அரசு திருத்திக்கொள்ள வேண்டும்.

எங்களுக்கு எவ்வித முரணும் இல்லை

சட்டப்பேரவைத் தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் எங்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை. எங்களது வெற்றிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பெரும் உதவியாக இருந்தாா். தனிச் சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக வரும் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. திமுக கூட்டணியில் எங்களுக்கு எவ்வித முரணும் இல்லை என்றாா்.

Summary

M.H. Jawahirullah criticizes the transformation of the Secretariat into a TVK office...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.