பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது: எவ்வளவு?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது தொடர்பாக...

News image

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 10:29 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.1,15,440-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த ஜூன் 1-இல் கிராம் ரூ.14,500-க்கும், பவுன் ரூ.1,16,000-க்கும் விற்பனையாது. தொடா்ந்து, ஜூன் 2,3 ஆகிய இரு நாள்கள் விலையில் எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14,480-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,15,840-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,430-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமும் ரூ.5 குறைந்து ரூ.280-க்கும், கிலோவுக்கு (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold, Silver today price in Chennai (June 5)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.