இளநிலை நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் திங்கள்கிழமை (ஏப்.27) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டால் பதற்றம் வேண்டாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில், இந்த முறை 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
இந்த நிலையில், நிகழாண்டு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வு மையம், ஹால் டிக்கெட் திங்கள்கிழமை (ஏப்.27) வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை https://neet.nta.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டால் மாணவர்கள் பதற்றமடைய வேண்டாம். ஒரே நேரத்தில் மாணவர்கள் அதிகயளவில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதால் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கலை தவிர்ப்பதற்கு incognito மோடை பயன்படுத்தவும்.
இதுவரை 11 லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மாணவர்கள் பொறுமையுடன் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யுமாறு தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கேட்டுக்கொண்டுள்ளது.
நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
Summary
To download the NEET UG hall ticket 2026, candidates need to login through application number and password.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

இளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


