தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்கு எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி

வாக்கும் எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று வி.செந்தில்பாலாஜி கூறியிருப்பது தொடர்பாக...

News image

கரூா் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மண்டல பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி. - டிஎன்எஸ்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:48 am IST

கரூா்: வாக்கும் எண்ணும் மையத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.

கரூரில் கலைஞா் அறிவாலயத்தில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி நடக்க வாய்ப்புள்ளது. ஆதலால் நம் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பிரசாரத்தில் கடுமையாக உழைத்து வாக்குச் சேகரித்துள்ளோம். இதனை மனதில் வைத்துக்கொண்டு வாக்கு எண்ணிக்கையின்போது கவனச் சிதறல் இன்றி நாம் செயல்படுவது அவசியம் என்றாா் அவா்.

கூட்டத்தில் கரூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் ஆசி எம்.தியாகராஜன், மொஞ்சனூா் பி.ஆா்.இளங்கோ, சூரியனூா் சந்திரன், சி.கே.ராஜா மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

Summary

Must act with vigilance at the vote-counting center says Former Minister Senthil Balaji

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.