பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பாரதிராஜா திரையில் தோன்றி நடித்த திரைப்படங்கள்!

பாரதிராஜா திரையில் தோன்றி நடித்த திரைப்படங்கள் பற்றி..

News image

பாரதிராஜா நடித்த நிறம் மாறும் உலகில் - file photo

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி சிம்மாசனத்தைப் பிடித்தவர் பாரதிராஜா. திரைப்பட இயக்குநர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பல்வேறுத் தோற்றங்களில் மக்களின் மனதை வென்றவர் பாரதிராஜா.

1977-ஆம் ஆண்டில் பதினாறு வயதினிலே திரைப்படத்தில் அறிமுகமான இவர் கிராமத்து வாழ்க்கையைத் தனது படங்களில் மிகவும் உண்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் திரையில் காட்டி புகழ்பெற்றவர்.

1978 இல் வெளியான "சிகப்பு ரோஜாக்கள்" திரைப்படம் பாரதிராஜா கிராமத்துப் படங்களை மட்டுமே எடுப்பார் என்ற விமர்சனத்தை உடைத்தது. அதாவது ஒரு த்ரில்லர் திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்திய படம் அது. 1979 இல் பாக்யராஜ் மற்றும் ரதி அக்னிகோத்ரி நடிப்பில் வெளியான "புதிய வார்ப்புகள்" திரைப்படத்தில் ஊர் நாட்டாமைகள் செயல்களை அம்பலத்தினார். இதில் "இதயம் போகுதே" பாடல் மிகவும் பிரபலமானது. இதே போன்று அதே ஆண்டு சுதாகர், ராதிகா, விஜயன், ரதி நடிப்பில் வெளியான "நிறம் மாறாத பூக்கள்" மிகவும் பேசப்பட்டது. இதில் "ஆயிரம் மலர்களே, இரு பறவைகள்" பாடல்கள் மிகவும் பிரபலமானது.

பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு வரை, தமிழ் திரைப்படங்கள் படப்பிடிப்பு நிலையங்களுக்குள் (ஸ்டுடியோ) உருவாகி வந்த நிலைகளை மாற்றி, கேமராக்களைத் தூக்கிக்கொண்டு கிராமங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் அழைத்துச் சென்று இயற்கையான கிராமத்துத் தெருக்களுக்கும், வயல்வெளிகளுக்கும் சென்று, தமிழ் சினிமாவின் காட்சி அமைப்புகளில் "மண் வாசனை" வீசச் செய்தவர்.

மக்கள் இவரை இயக்குநர் இமயம் என்று அன்பாக அழைத்தனர். இவருடைய திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அதிக ஒப்பனையின்றி எளிய மனிதர்களாகவே தோன்றுவார்கள். கிராமத்துக் கதைகளைப் படமாக்குவதில் கைதேர்ந்தவர் பாரதிராஜா.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இவர் பல படங்களை இயக்கி, பல விருதுகளை வென்றுள்ளார். 6 தேசிய விருதுகள், 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2 தமிழக அரசின் சினிமா விருதுகள், 2 நந்தி விருதுகளைப் பெற்றுள்ள பாரதிராஜாவிற்கு சத்யபாமா பல்லைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட படங்களுக்காக 6 முறை தேசிய விருது வென்றுள்ளார்.

பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான இயக்குநர் பாரதிராஜாவின் இன்னுயிர் ஜூன் 10 (இன்று) காலை பிரிந்தது. திரையுலக கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் குவிந்து வருகின்றனர்.

இயக்கம் மட்டுமின்றி அண்மைக் காலங்களில் நடிகராக சுமார் 25 படங்களில் பாரதிராஜா நடித்துள்ளார்.

பாரதிராஜா நடித்த திரைப்படங்கள்..

1. தேசிய தலைவர் (2025) - பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வரலாற்றுத் திரைப்படமாகும். இப்படத்தில் முத்துராமலிங்கத் தேவராக பஷீர் நடிக்க, பாரதிராஜா, ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையமைத்துள்ளார்.

2. துடரும் (2025) - இது மலையாள மொழித் திரைப்படமாகும். மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழிலும் வெளிவந்தது. இப்படம் மோகன்லால் - சோபானா இணைந்து நடித்த திரைப்படமாகும். சில காட்சிகள்தான் என்றாலும் நடிகராக பாரதிராஜா இப்படத்தில் கவனம் ஈர்க்கின்றார்.

3. நிறம் மாறும் உலகில் (2025) - இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். பிரிட்டோ ஜேபி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதில் பாரதிராஜா , நட்டி சுப்பிரமணியம் , ரியோ ராஜ் மற்றும் சாண்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யோகிபாபு, வடிவுகரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

4. திரு.மாணிக்கம் (2024) நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார், சமுத்திரக்கனி டைட்டில் ரோலில் நடித்தார், அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

5. மகாராஜா (2024) - விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், சச்சனா நமிதாஸ், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியம், சிங்கம்புலி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். 

6. கள்வன் (2024) - ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படமாகும். பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

7. நாநா (2023)

8. மார்கழி திங்கள் (2023)

9. கருமேகங்கள் கலைகின்றன (2023)

10. திருவின்குரல் (2023)

11. திருச்சிற்றம்பலம் (2022)

12. தி வாரியர் (2022)

13. குற்றம் குற்றமே (2022)

14. ராக்கி (2021)

15. ஈஸ்வரன் (2021)

16. மீண்டும் ஒரு மரியாதை (2020)

17. நம்ம வீட்டுப் பிள்ளை (2019)

18. கென்னடி கிளப் (2019)

19. கடவுள் 2 (2018)

20. படை வீரன் (2018)

21. குரங்கு பொம்மை (2017)

22. பாண்டிய நாடு (2013)

23. ரெட்டைசுழி (2010)

24. ஆயித எழுத்து (2004)

25. கல்லுக்குள் ஈரம் (1980)

அதோடு, முதல் மரியாதை, சீதாகோக சிலகா, முதல் மரியாதை வேதம் புதிது, கருத்தம்மா, அந்தி மந்தாரை, கடல் பூக்கள் ஆகிய ஆறு படங்கள் பாரதிராஜாவுக்கு தேசிய விருதுகளை பெற்று தந்தது.

தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தாலும் அவரது பாடல்களும், படங்களும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.