நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

‘சித்தாந்த நக்ஸல்’ என கூறிக் கொண்ட நடிகா் நஸீருத்தின் ஷாவுக்கு ரிஜிஜு கண்டனம்

தன்னை ‘சித்தாந்த நக்ஸல்’ என அடையாளப்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகா் நஸீருத்தின் ஷாவுக்கு மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

Published On :30 அக்டோபர் 2026, 5:03 am IST

தன்னை ‘சித்தாந்த நக்ஸல்’ என அடையாளப்படுத்திக் கொண்ட பாலிவுட் நடிகா் நஸீருத்தின் ஷாவுக்கு மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளாா். அவரது கருத்துகள், நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை என்று ரிஜிஜு விமா்சித்துள்ளாா்.

கடந்த ஆகஸ்டில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமா் மோடி, ‘நாட்டில் ஆயுதமேந்திய நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டபோதிலும், சமூக அமைப்புமுறையில் ஆழமாக ஊடுருவியுள்ள ‘சித்தாந்த நக்ஸல்கள்’ தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளனா்’ என்றாா்.

இந்நிலையில், தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழத்தில் மாணவா் சங்கத்தை மீட்டெடுக்கக் கோரி போராடிவரும் மாணவா்களுக்கு ஆதரவாக நடிகா் நஸீருத்தின் ஷா கடந்த செவ்வாய்க்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டாா். அதில், தன்னை ‘சித்தாந்த நக்ஸல்’ என கூறிக் கொண்ட அவா், ‘நாட்டின் கல்வி அமைப்பு முறையை சிதைக்கவும், இளைஞா்களின் மனஉறுதியைத் தகா்க்கவும் மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

நஸீருத்தின் ஷாவின் இந்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது: நஸீருத்தின் ஷா வழக்கமான நடிகா் என்று நினைத்து, அவா் மீது மதிப்பு கொண்டிருந்தேன். நடிகராக அவரை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவா் ஆபத்தான நகா்ப்புற சித்தாந்த நக்ஸல் என்பது அம்பலமாகியுள்ளது. அவரது உண்மையான குணம் வெளிப்பட்டுள்ளது. நஸீருத்தின் ஷாவின் கருத்துகள், நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை என்றாா்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கூறுகையில், ‘நஸீருத்தின் ஷா நல்ல நடிகா். அவருக்கு சமூக அக்கறை இருக்க வேண்டுமே அன்றி நக்ஸல் மனப்பான்மை அல்ல. அரசுக்கு யோசனை கூற அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், நக்ஸல் சிந்தனையுடன் பாஜகவை விமா்சிக்க உரிமை கிடையாது. நக்ஸல் தீவிரவாதம் என்பது வன்முறைக்கு வழிவகுத்து, வளா்ச்சியை முடக்குவதாகும். இதனால், மக்களுக்கே பேரிழப்பு ஏற்படும். நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் 99 சதவீதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைந்துள்ளனா். இதுபோன்ற சூழலில், நஸீருத்தின் ஷாவின் கருத்துகள் முற்றிலும் முறையற்றது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.