நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

நாடு தாக்கப்படுவதாக கருதினால் தில்லி பேரணியில் இணையுங்கள்! ராகுல் அழைப்பு

தில்லி பேரணியில் கலந்துகொள்ள ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருப்பது பற்றி...

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 12:32 pm IST

நாடு தாக்குதலுக்கு உள்ளானதாக கருதும் அனைவரும் தில்லி பேரணியில் இணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.

வாக்காளா் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களின் ஒரு பகுதியாக வருகின்ற நவம்பர் 1 ஆம் தேதி தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது.

தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் பேரணியில், நாட்டு மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”காவல்துறையைப் பற்றியோ, தடியடியைப் பற்றியோ கவலைப்படாதீர்கள். பாஜகவினர் தங்கள் தந்திரங்களைச் செயல்படுத்தத் துணியமாட்டார்கள், அதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை.

இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், தேசத்தைக் காக்கவும் எங்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொள்ளுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடப்போம். எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

அனைத்து மாணவர் அமைப்புகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் அரசியல் கொள்கை எதுவாக இருந்தாலும் சரி, இந்தியா தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று நீங்கள் கருதினால் எங்களுடன் வந்து இணையுங்கள்.

இது ஒரு மிகச்சிறப்பான பேரணியாக அமையும். இந்த நாட்டின் ஆன்மாவைக் காப்பதற்கான பேரணி. உங்கள் அனைவரையும் பேரணியில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

If you believe the nation is under attack, join the Delhi rally – Rahul’s call

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.