நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தேர்தலில் நின்ற பிரபல ஜோதிடர்! கிடைத்த வாக்குகள் எத்தனை தெரியுமா?

தேர்தலில் நின்ற பிரபல ஜோதிடருக்குக் கிடைத்த வாக்குகள் எத்தனை என்பது பற்றி..

தேர்தல் - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 6:25 pm IST

ராஜஸ்தானைச் சேர்ந்த சமூக வலைத்தள இன்ஃப்ளூயென்சர் ஓம்பிரகாஷ் பிஷ்னோய் எதிர்கொண்டிருக்கும் அனுபவம், இந்த நவீன உலகில் பலருக்கும் ஒரு பாடமாக மாறியிருக்கலாம்.

இவர் மிகவும் பிரபலமான ஜோதிடராகவும், முகத்தைப் பார்த்தே ஜாதகத்தைச் சொல்பவராகவும் பிரபலமாக இருந்து வந்தார். ஆனால், அவரது சொந்த ஜாதகத்தைக் கணிக்க முடியாமல் ஏமாந்து போயிருக்கிறார்.

ராஜஸ்தானில் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் ஓம்பிரகாஷ் பிஷ்னோய். இவருக்கு இன்ஸ்டாவில் 14 லட்சம் பேரும், முகநூலில் 2.32 லட்சம் பேரும், யூடியூபில் 5 லட்சம் பேரும் பின்தொடர்வோர் உள்ளனர்.

இவர், தனக்கு இத்தனை பின்தொடர்வோர் இருக்கிறார்களே என்று ஒரு ஆசையில், கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அங்கு மொத்தமாக 1600 வாக்குகள் உள்ளன. தன்னுடைய முகம் பிரபலமானதே என்று நினைத்து இவர் இந்த தேர்தலில் நின்றுள்ளார்.

ஆனால், இவருக்கு தேர்தலில் கிடைத்தது என்னவோ வெறும் 33 வாக்குகள்தான். இப்படி படுதோல்வியடைந்த ஓம்பிரகாஷ், தன்னுடைய பின்தொடர்வோரை நினைத்து வருந்துவதா? இல்லை தன்னுடைய சொந்த ஜாதகத்தைக் கணிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவதா என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்.

பின்தொடர்வோரும், லைக்குகளும் வாக்குகளாக மாறாது என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது என்று பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.