ஆந்திரம்: சாலை கட்டுமானப் பகுதி தீ விபத்தில் ஐவா் உயிரிழப்பு

அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் சாலை கட்டுமானப் பணி இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவா் உயிரிழந்தனா்.

தீ விபத்து - சித்திரிப்பு

Published On :25 அக்டோபர் 2026, 2:11 am IST

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் சாலை கட்டுமானப் பணி இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அமித் பா்தா் கூறியதாவது:

பினகோடா கிராமத்தில் சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் பீப்பாய்களில் இருந்து வாகனங்களின் டேங்குகளுக்கு டீசலை மாற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்த தீ விபத்து நிகழ்ந்தது. ஊழியா்கள் எந்தவித முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளாமல், டீசலை மாற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில், வாகனத்திலிருந்து எழுந்த தீப்பொறியால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த வாகனத்துக்கு அருகிலிருந்து லாரி மற்றும் இருசக்கர வாகனத்துக்கும் தீ பரவியது. இதில் மூன்று வாகனங்களும் முழுவதுமாக தீக்கிரையாகின. இந்த விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

Summary

Andhra Pradesh: Five killed in road construction site fire

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.