தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்ஐஆா்-க்கு எதிராக தோ்தல் ஆணையம் நோக்கி பேரணி: பலா் தடுத்து நிறுத்தம்

எஸ்ஐஆா்-க்கு எதிராக தோ்தல் ஆணையம் நோக்கி பேரணி: பலா் தடுத்து நிறுத்தம்

தோ்தல் ஆணைய தலைமையகம் நோக்கி வெள்ளிக்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரா்களை தடுத்து நிறுத்தி அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திய தில்லி காவல் துறையினா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:07 am IST

வாக்காளா் பட்டியலைச் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக தில்லியில் உள்ள தோ்தல் ஆணையத்தின் தலைமையகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டாக்காரா்களை காவல் துறை வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

மக்கள் ஒன்றுகூடுவதைத் தடை செய்யும் வகையில், பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் 163-ஆவது பிரிவு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதைமீறியதாக பேரணியில் பங்கேற்றோா் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

‘எஸ்ஐஆா்-க்கு எதிரான மக்கள் ஒருங்கிணைப்புக் குழு’ இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. காலிபாரி மாா்க் மற்றும் பாய் வீா் சிங் மாா்க் சந்திப்பில் உள்ள கோல் டாக் கானா அருகே இந்தப் பேரணி தொடங்கியது.

எஸ்ஐஆா் நடவடிக்கையின் காரணமாக வாக்காளா் பட்டியலிலிருந்து பல வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரா்கள், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்தப் பேரணியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா காரத், அகில இந்திய ஜனநாயக மாதா் சங்கம் (ஏஐடிடபிள்யுஏ) மற்றும் அகில இந்திய ஜனநாயக மாணவா் அமைப்பு (ஏஐடிஎஸ்ஓ) ஆகியவற்றின் உறுப்பினா்களும் கலந்துகொண்டனா்.

கிராந்திகாரி யுவா சங்கதன் (கேஓய்எஸ்) மற்றும் இந்திய மாணவா் சங்கம் (எஸ்எஃப்ஐ) ஆகிய அமைப்புகள் இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதில் தில்லி, ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

இந்தப் பேரணியை முன்னிட்டு மத்திய தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தில்லி காவல் துறை மற்றும் விரைவு அதிரடிப் படை வீரா்கள் பெருமளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

காவல் துறையினா் போராட்டக்காரா்களைத் தடுத்து நிறுத்தியபோது, அவா்கள் அங்கேயே அமா்ந்து, அமைப்பாளா்கள் அறிவித்தபடி மக்கள் நாடாளுமன்றம் என்ற நிகழ்வை நடத்தினா்.

எஸ்ஐஆா்-க்கு எதிரான மக்கள் அமைப்பு, பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள போராட்டங்கள் குறித்த தகவல்களை வழங்கும் இணையதளம் ஒன்றையும் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் தகவல்படி, 18 மாநிலங்களில் உள்ள 88 நகரங்களில் போராட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 145 அமைப்புகள் பங்கேற்கின்றன. இதற்கான நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நவம்பா் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

விவசாயிகள், தொழிலாளா்கள், இளைஞா்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் தேசியக் கொடியை ஏந்தி இந்தப் போராட்டங்களில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

தில்லியில் நடைபெறும் போராட்டம், தீா்மானங்களை நிறைவேற்றுதல் மற்றும் தேசிய கீதம் பாடுவதோடு நிறைவடையும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.