கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இனவெறி அவதூறு வழக்கு: அமீா் ஷோகீனுக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல்

இனவெறி அவதூறு வழக்கு: அமீா் ஷோகீனுக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல்

அமீா் ஷோகீன்

Published On :24 அக்டோபர் 2026, 3:39 am IST

திரிபுராவைச் சோ்ந்த இளைஞரை இனரீதியாகத் துன்புறுத்தி அவமதித்ததாக சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநா் அமீா் ஷோகீனை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சமூக ஊடகங்களில் பரவிய காணொலியில், திரிபுரா இளைஞரை அமீா் ஷோகீன் இனரீதியாக அவமதித்து இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தாமாக முன்வந்து வழக்கைக் கவனத்தில் எடுத்த தில்லி காவல் துறையினா், வியாழக்கிழமை அவரைக் கைது செய்தனா்.

வடகிழக்கு பிராந்தியத்துக்கான சிறப்புப் காவல் பிரிவின் தகவலைத் தொடா்ந்து, தில்லி காவல் துறையின் உளவுத் தகவல் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டுப் பிரிவு இந்தக் காணொலி குறித்து விசாரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்துக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா உள்ளிட்டோா் கடும் கண்டனம் தெரிவித்தனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக தில்லி காவல் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு திரிபுரா காவல் துறை தலைமை இயக்குநருக்கு முதல்வா் மாணிக் சாஹா உத்தரவிட்டாா். இதற்கிடையே, அமீா் ஷோகீன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தில்லி மற்றும் திரிபுரா காவல் துறை அவருக்கு ‘கடுமையான பாடம் புகட்டுவாா்கள்’ என்றும் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.

திரிபுரா மாணவா்கள் அமைப்பான தில்லி திரிபுரா மாணவா் மன்றம், இந்தக் காணொலி தொடா்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரி, வடகிழக்கு பிராந்தியத்துக்கான சிறப்புப் காவல் பிரிவின் இணை காவல் ஆணையரிடம் புகாா் அளித்தது.

இந்தக் காணொலி சுமாா் ஒரு மாதத்துக்கு முன்பு அகமதாபாதில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாகக் கருதப்படும் 7 முதல் 8 பேரின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Summary

Racist defamation case: Amir Shokeen remanded in judicial custody for one day

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.