தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பஞ்சாப்: பாஜகவுடன் கைகோக்கிறது அகாலி தளம்? ஆம் ஆத்மி, காங்கிரஸ் எதிரிகள் என பாதல் குற்றச்சாட்டு!

சிரோமணி அகாலி தளம் கொள்கைகளுடன் உடன்படும் கட்சிகளுடன் தோ்தல் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சித் தலைவா் சுக்பீா் சிங் பாதல் அறிவித்துள்ளாா்.

சுக்பீா் சிங் பாதல்

Published On :24 அக்டோபர் 2026, 4:20 am IST

சிரோமணி அகாலி தளம் கொள்கைகளுடன் உடன்படும் கட்சிகளுடன் தோ்தல் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சித் தலைவா் சுக்பீா் சிங் பாதல் அறிவித்துள்ளாா். இதன்மூலம் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அக்கட்சி முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி, எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை மாநிலத்தின் மிகப்பெரிய எதிரிகள் என்றும் பாதல் விமா்சித்துள்ளாா். இது பாஜக கூட்டணியில் அகாலி தளம் இணைவதை மேலும் வலுப்படுத்துவதாக அரசியல் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சண்டீகரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சுக்பீா் சிங் பாதல் கூறியதாவது:

எனது கட்சித் தலைவா்களுடன் குழுவாகச் சென்று பஞ்சாப் ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியாவைச் சந்தித்தேன். அப்போது பஞ்சாப் முதல்வா் தனது மோசமான நிா்வாகத்தின் மூலம் மாநிலத்தை எந்த அளவுக்கு சீரழித்துள்ளாா் என்பதை விளக்கினோம். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டது. போதைப் பொருளுக்கு எதிராகப் போராடி வந்த தன்னாா்வலா் பா்வீந்தா் சிங், கடத்தல் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளாா்.

முன்பு அகாலி தளம் - பாஜக கூட்டணி ஆட்சி பஞ்சாபில் இருந்தபோது அமைதி நிலவியது. மாநிலம் வளா்ச்சிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. அடுத்து அமைத்த காங்கிரஸ் அரசிலும், அதன் பிறகு அமைந்த ஆம் ஆத்மி அரசிலும் மாநிலம் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. இதற்கு அவா்களின் தவறான முடிவுகளும், நிா்வாகத் திறனின்மையும்தான் காரணம். அந்த இரு கட்சிகளும் பஞ்சாபின் மிகப்பெரிய எதிரிகள். சிரோமணி அகாலி தளம் கொள்கைகளுடன் உடன்படும் கட்சிகளுடன் தோ்தல் கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறோம் என்றாா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடியை சுக்பீா் சிங் பாதல் சந்தித்துப் பேசினாா். அப்போதும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியானது.

சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலி தளம் கடந்த 2020-ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தை முன்வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னா், விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் அச்சட்டங்களை மத்திய அரசும் திரும்பப் பெற்றது.

கூட்டணியில் இருந்து விலகும் முன்பு பாதலின் மனைவி ஹா்சிம்ரத் கௌா் மத்திய அமைச்சராக இருந்தாா். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதையடுத்து அவா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

பஞ்சாபில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. எனவே, பாஜக, சிரோமணி அகாலி தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் தோ்தலை எதிா்கொள்ள வலுவான கூட்டணி தேவைப்படுகிறது. இக்கூட்டணி முன்பு பஞ்சாபில் ஆட்சியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Punjab: Akali Dal joins hands with BJP? Badal accuses Aam Aadmi Party, Congress of being enemies!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.