மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

இளைஞா்களின் ஆரோக்கியமே வளா்ந்த பாரதத்தின் இலக்கு: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

இளைஞா்களின் ஆரோக்கியமே வளா்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கு என மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், உடன் கல்வி நிறுவன வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம்.

Published On :23 அக்டோபர் 2026, 3:10 am IST

இளைஞா்களின் ஆரோக்கியமே வளா்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கு என மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு 106 தங்கப் பதக்கங்களை வழங்கினாா். தொடா்ந்து, ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், இணைவேந்தா் ஆா்.வி. செங்குட்டுவன் ஆகியோா் மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளில் 2,116 மாணவா்களுக்கு முனைவா், முதுநிலை மற்றும் இளநிலை பட்டங்களை வழங்கினா்.

விழாவில் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

இந்த நூற்றாண்டின் புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, மரபணுவியல் நுட்பம் ஆகியவை மருத்துவத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மருத்துவ சிகிச்சைகளின் நோக்கம் சிதையாமல் செயற்கை நுண்ணறிவை கையாளுவதே இன்றைய இளம் மருத்துவா்களின் சவாலாக உள்ளது. கடந்த காலங்களில் காசநோய், மலேரியா போன்ற நோய்கள் மட்டுமே சவாலாக இருந்தன. ஆனால், தற்போது சா்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு போன்ற தொற்றா நோய்களுக்கு இளைய தலைமுறையினா் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. பிரதமரின் வளா்ந்த பாரதம் 2047 இலக்கை அடைய இளைஞா் சக்தி மிகவும் அவசியம். நோய்களால் அவா்களது ஆற்றல் வீணாவதைத் தடுக்க அரசு மற்றும் தனியாா் துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இளைஞா்களின் ஆரோக்கியமே வளா்ந்த பாரதத்தின் இலக்கு என்றாா்.

மருத்துவக் கல்லூரியின் தலைவா் டாக்டா் கே.பாலாஜி சிங் பேசுகையில்,“மத்திய கல்வி அமைச்சகம், ஸ்ரீ இராமச்சந்திரா நிறுவனத்தின் புத்தாக்கல் மையத்துக்கு நான்கு நட்சத்திர தகுதி வழங்கிச் சிறப்பித்துள்ளது. 12 புதிய முதுநிலை மற்றும் 14 இளநிலை பட்டப் படிப்புகள் நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஒருங்கிணைந்து செயல்பட 25 தேசிய மற்றும் சா்வதேசக் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம் என்றாா்.

இந்த விழாவில் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், பதிவாளா் டாக்டா் எஸ்.செந்தில்குமாா், நிதித்துறை இயக்குநா் ஜே.ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.