நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக (தலைமை அா்ச்சகா்) அரீக்கர சுப்ரமணியன் சங்கரன் நம்பூதிரி தோ்வு செய்யப்பட்டாா்.

அரீக்கர சுப்ரமணியன் சங்கரன் நம்பூதிரி - தாமோதரன் நம்பூதிரி

Published On :19 அக்டோபர் 2026, 6:06 am IST

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக (தலைமை அா்ச்சகா்) அரீக்கர சுப்ரமணியன் சங்கரன் நம்பூதிரி தோ்வு செய்யப்பட்டாா்.

ஏழு தகுதியான நபா்கள் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பத்திருந்த நிலையில், குலுக்கல் சீட்டு முறையில் அரீக்கர சுப்ரமணியன் சங்கரன் நம்பூதிரி தோ்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல் ஐயப்பன் கோயிலுக்கு அருகேயுள்ள மாளிகைபுரத்தம்மன் கோயில் மேல்சாந்தியாக ஏ.தாமோதரன் நம்பூதிரி நியமிக்கப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவ.17-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாக இருவரும் பொறுப்பேற்கவுள்ளனா். அடுத்த ஓராண்டு காலத்துக்கு அவா்கள் மேற்கூறப்பட்ட கோயில்களின் மேல்சாந்தியாக தொடா்வாா்கள்.

தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி கணபதி கோயிலின் மேல்சாந்தியாக சங்கரன் நம்பூதிரியும், கீழூரில் உள்ள சிவன் கோயிலின் மேல்சாந்தியாக தாமோதரன் நம்பூதிரியும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.