தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த போராட்டம் ஜந்தர் மந்தருக்காகவா? சிஜேபி எச்சரிக்கை!

ஜந்தர் மந்தர் குறித்து சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே பேசியதாவது...

அபிஜீத் தீப்கே - படம் - பிடிஐ

Published On :13 அக்டோபர் 2026, 6:22 pm IST

போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் (சிஜேபி) தலைவர் தலைவர் அபிஜீத் தீப்கே செவ்வாய்க்கிழமை (அக். 13) எச்சரித்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, பல்வேறு விதமான போராட்டங்கள் ஜந்தர் மந்தரில் நடைபெற்றன. அந்த வரிசையில், அண்மையில் நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டமும் அங்குதான் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, எஸ்ஐஆர் பணிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக எழுந்த புகார் எழுந்தது. எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபியினர் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் காவல்துறை கைது செய்தது.

இதையடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக போராட்டம் நடத்தும் இடமாகத் இருந்த ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை எனவும் அதற்கு மாற்று இடங்களையும் தில்லி காவல்துறை நேற்று (அக். 13) அறிவித்தது.

இந்தத் தடையை மீறி ஜந்தர் மந்தர் அருகே சிஜேபியின் செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் இன்று போராட்டம் நடத்த முயன்ற நிலையில் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய அபிஜீத் தீப்கே, போராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

Summary

Abhijit Deepke, leader of the Cockroach Janata Party (CJP), warned on Tuesday (Oct. 13) that a nationwide protest would erupt if Jantar Mantar were closed to protesters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.