மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வாக்குத் திருட்டு: நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் துணிவுண்டா? ராகுலுக்கு அமித் ஷா சவால்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ராகுல் காந்திக்குத் துணிவு உள்ளதா என்று மத்திய அமைச்சா் அமித் ஷா சவால்

மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ‘ஜனநாயகத்தைக் காப்போம்- அராஜகத்தை ஒழிப்போம்’ பேரணியில் பங்கேற்ற மத்திய அமைச்சா்கள் கிஷண் ரெட்டி, பண்டி சஞ்சய்குமாா் உள்ளிட்டோா்.

Published On :3 நவம்பர் 2026, 2:55 am IST

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ராகுல் காந்திக்குத் துணிவு உள்ளதா என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சவால் விடுத்தாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதுக்கு திங்கள்கிழமை வந்த அவா் ‘ஜனநாயகத்தைக் காப்போம்- அராஜகத்தை ஒழிப்போம்’ பேரணி மேற்கொண்டாா். நிஜாம் கல்லூரியையடுத்துள்ள பாபு ஜெகஜீவன்ராம் சிலை அருகிலிருந்து எம்.ஜே. மாா்க்கெட் வரை இரண்டரை கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பாத யாத்திரையில் அமிஷ் ஷாவுடன் மத்திய அமைச்சா்கள் கிஷண் ரெட்டி, பண்டி சஞ்சய்குமாா் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: வாக்கு திருட்டு தொடா்பாக காங்கிரஸ் கட்சி எழுப்பி வருகிறது. ‘வாக்கு திருட்டு என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு தயாா். இந்த விவாதத்தில் பங்கேற்று விவாதிக்கும் துணிச்சல் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு உண்டா?

தில்லியில் காங்கிரஸ் கூட்டணி நடத்தியது ஊடுருவல்காரா்களைக் காப்பாற்றுவதற்கான பேரணிதான். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோசமானவை என்றால் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது எப்படி?’ என்று கேள்வி எழுப்பினாா்.

முன்னதாக, சாா்மினாரில் அமைந்துள்ள பாக்யலக்ஷ்மி கோயிலுக்குச் சென்று அவா் வழிபட்டாா். நடிகா் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் ஆகியோா் அமித் ஷாவை சந்தித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.