பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல: இந்திய கம்யூனிஸ்ட்

வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது குறித்து...

News image

பினோய் விஸ்வம் - படம் - ஏஎன்ஐ

Updated On :30 மே 2026, 11:07 am IST

வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் வி.டி. சதீசன் தலைமையிலான புதிய அரசின் சட்டப்பேரவைக் கூட்டம், திருவனந்தபுரத்தில், தொடங்கியது. இதில், மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நேற்று (மே 29) பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்தி மட்டுமே இசைக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து வினோய் விஸ்வம் பேசியதாவது:

வந்தே மாதரம் ஒரு தேசிய கீதம் அல்ல. சுதந்திர இந்தியாவில் அது ஒருபோதும் தேசிய கீதமாகக் கருதப்படவில்லை. குறிப்பிட்ட சில சூழல்களில் விரும்பினால், முதல் இரண்டு பத்திகளைப் பாடலாம் என்ற ஒரு உடன்பாடு இருந்தது.

அதுவும் கட்டாயமில்லை; அது விருப்பத்துக்குரியது. முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடலாம். மூன்றாவது பத்தியிலிருந்து, அது ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுள்களையும் பெண் தெய்வங்களையும் குறிப்பிடத் தொடங்குகிறது.

அதனால்தான், சுதந்திரத்துக்கு முந்தைய நாள்களில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடப்படுவதை காங்கிரஸ் கேள்விக்கு உள்ளாக்கியது எனத் தெரிவித்தார்.

மேலும், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் அனைத்து பத்திகளும் இடம்பெற வேண்டும் என, மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Vinoy Viswam, the Kerala State Secretary of the Communist Party of India (CPI), stated on Saturday that 'Vande Mataram' is not the national anthem.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.