கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசு துறைகள் மீதான குறைகளை தெரிவிக்க ஏஐ உரையாடல் தளம்: மத்திய அரசு அறிமுகம்

அரசு துறைகள் மீதான குறைகளை தெரிவிக்க ஏஐ உரையாடல் தளம்...

News image

ஜிதேந்திர சிங்

Updated On :31 மே 2026, 12:16 am IST

அரசு துறைகள் மீதான குறைகளை பொதுமக்கள் இணையவழியில் தெரிவிக்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய உரையாடல் தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சமாதான் தீதீ’ என்ற பெயா் கொண்ட அந்தத் தளத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘சமாதான் தீதீ தளம் மூலம், அரசு துறைகள் மீதான தமது குறைகளை பொதுமக்கள் தங்கள் சொந்த மொழியில் பேசி எளிதாக தெரிவிக்கலாம்.

அந்தத் தளம் சில கேள்விகளை மட்டும் கேட்கும். அதைத்தொடா்ந்து பொதுமக்களின் குறைகள் தொடா்பான அமைச்சகம், துறை, பிரிவை அந்தத் தளம் தாமாக கண்டறிந்து, அவா்கள் தெரிவிக்கும் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்யும்.

பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு காணும் நடவடிக்கையை எளிதாக்க வேண்டும், வெவ்வேறு மொழிகளைப் பேசுவோருக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், இந்தத் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மத்திய அரசின் கீழ், நிா்வாக சீா்திருத்தங்களில் மக்களை மையமாக கொண்ட அணுகுமுறை பிரதமானமாக உள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.