சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் இன்று காலை தொடங்கியது.
மத்திய பணியாளா் தோ்வாணையம், சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலுமாக 2 அமா்வுகளாக நாடு முழுவதும் நடத்துகிறது.
இந்தாண்டு, நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஏறத்தாழ 933 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 8.19 லட்சம் (8,19,372) விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு மையங்களில் தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்களைக் கொண்டுசெல்ல தேர்வாணையம் தடை விதித்துள்ளது.
மேலும், தேர்வு மையங்களில் பைகள், விலையுயர்ந்த பொருள்கள் கொண்டு வருவதிலும் தேர்வாணையம் எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி, தொலைந்துபோன எந்த பொருள்களுக்கும் தேர்வாணையம் பொறுப்பேற்கப்பட மாட்டாது.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களிலும் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண் முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.
சிவில் சர்வீஸ் தேர்வானது, அரசுப் பணியிடங்களில் போட்டியிடும் லட்சக்கணக்கானோரின் ஆயத்த நிலையைச் சோதிப்பதாக மட்டுமில்லாமல், அவர்களின் ஒழுக்கம், துல்லியம், அழுத்தத்தின் கீழும் பொறுமையைக் கடைப்பிடிக்கும் திறனையும் சோதிக்கிறது.
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரலாற்றிலேயே முதன்முறையாக, தேர்வு முடிந்த பிறகு, தற்காலிக விடைக்குறிப்புகளையும் தேர்வாணையம் வெளியிடவுள்ளது. முன்னர், இறுதி முடிவுகள் வெளியான பின்னரே விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு வந்ததால், தேர்வர்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
மேலும், சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்வரை, தேர்வர்கள் தங்களின் நுழைவுச் சீட்டுகளை கவனமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Summary
UPSC Civil Services (Preliminary) Examination 2026: Over 8 Lakh Candidates Appear For Civil Services Exam Today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 4.69 லட்சத்தில் டாடாவின் புதிய டியாகோ ஹேட்ச்பேக்!

சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 3,896 போ் எழுதினா்

புதுச்சேரியில் நாளை 7 மையங்களில் சிவில் சா்வீஸ் தோ்வு

24-இல் யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: வேலூரில் 7 மையங்களில் 1,929 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

