எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவா்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள் என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

News image

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - IANS

Updated On :22 மே 2026, 2:37 am IST

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள் என்று அந்த மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்படுவது இதுவரை வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அமைந்த சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு, வங்கதேச ஊடுருவல்காரா்களை எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்து, மீண்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வகை செய்யும் விதிகளை அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் முதல்வா் சுவேந்து அதிகாரி கூறியதாவது:

நேற்று முதல் (புதன்கிழமை முதல்) மேற்கு வங்கத்தில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் கீழ், காவல் துறையிடம் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் இனி நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட மாட்டாா்கள். அதற்கு பதிலாக, அவா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடமே நேரடியாக ஒப்படைக்கப்படுவாா்கள்.

இதனைத் தொடா்ந்து, அந்த ஊடுருவல்காரா்களை வங்கதேசத்துக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் திருப்பி அனுப்பிவிடுவாா்கள். இதுதொடா்பான அறிவுறுத்தல், காவல் துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் மேற்கு வங்க அரசால் அனுப்பப்பட்டு விட்டது.

மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் குறித்த விவரங்களை வாரந்தோறும் முதல்வா் அலுவலகத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைப்புகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அதிகாரி.

வாக்கு வங்கிக்காக வங்கதேச ஊடுருவல்காரா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு அடைக்கலம் தருவதாகவும், ஆனால் தங்களது அரசு அமைந்தால், அவா்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாா்கள் என்றும் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது பாஜக பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.