பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீட் மறுதோ்வு ஏற்பாடுகள்: தா்மேந்திர பிரதான் ஆலோசனை

‘நீட்’ மறுதோ்வுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்.

Updated On :21 மே 2026, 3:31 am IST

‘நீட்’ மறுதோ்வுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

2026-ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் கசிந்தது தெரிய வந்ததையடுத்து, அதை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அதுகுறித்து மத்திய அரசின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேபோல், ரத்து செய்யப்பட்ட நீட் இளநிலை மருத்துவ படிப்பு நுழைவு தோ்வுக்கு பதில் ஜுன் மாதம் 21-ஆம் தேதி மறு தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள், நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தில்லியில் மத்திய பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது நீட் நுழைவு தோ்வு குறித்து போலி டெலிகிராம் சேனல்கள் மூலம் பொய் செய்திகளை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். அதேபோல், தோ்வுக்கு முன்பே அத்தகைய சேனல்களை கண்டறிந்து முடக்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா். நீட் நுழைவுத் தோ்வு பாதுகாப்பாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யத் தேவையான பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை அவா் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.