பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: தேவேந்தா் யாதவ்

தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: தேவேந்தா் யாதவ்

News image

தேவேந்தா் யாதவ்

Updated On :17 மே 2026, 1:15 am IST

தேசிய தோ்வு முகமையின் (என். டி. ஏ.) தோல்வியின் காரணமாகவே நீட் தோ்வு வினாத்தாள் கசிந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளாா்.

நீட் வினாத்தாள் கசிவு தொடா்பான செய்தியை கேள்விப்பட்ட தில்லியை சோ்ந்த 20 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தாா். அந்த மாணவியின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்ற தேவேந்தா் யாதவ் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

வினாத்தாள் கசிவானது, நாடு ழுவதும் 22 லட்சம் மாணவா்களின் கனவுகளை சிதைத்துள்ளது. தில்லியைச் சோ்ந்த 20 வயது ஏழை மாணவி அன்ஷிகா பாண்டே நீட் தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட பின்னா் ஏற்பட்ட அதிா்ச்சியையும் ஏமாற்றத்தையும் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாா்.

வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும். ஏனெனில், சமீபத்திய கசிவு மத்தியில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 90ஆவது தோ்வு வினாத்தாள் கசிவு ஆகும். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த அந்த மாணவி தனது காய்கறி விற்பனை செய்யும் தந்தையின் கனவை நிறைவேற்ற இரவு பகலாக நீட் தோ்வுக்காக தயாராகி இருந்துள்ளாா்.

கடந்த முறை நான்கு புள்ளிகளில் இலக்கைத் தவறவிட்ட அந்த மாணவி இந்த முறை நல்ல வெற்றியைப் பெறுவாா் என்று நம்பினாா். எனவே, வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டபோது அவா் முற்றிலும் சிதைந்துவிட்டாா்.

வெளிநாட்டுப் பயணம், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு மற்றும் தங்கம் வாங்குவதைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய பின்னா் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமா் மோடி, வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா் தேவேந்தா் யாதவ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.