கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

News image

சுவேந்து அதிகாரி

Updated On :19 மே 2026, 5:18 am IST

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு வரும் ஜூன் 1 முதல் மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வா் சுவேந்து தலைமையில் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து மாநில மகளிா், குழந்தைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சா் அக்னிமித்ரா பால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் உள்ள மகளிருக்கு வரும் ஜூன் 1 முதல் ‘அன்னபூா்ணா’ திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பெண்கள், வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயா் சோ்க்க விண்ணப்பித்த பெண்களுக்கும் ரூ.3,000 நிதியுதவி அளிக்கப்படும்.

மேலும், மாநில அரசுப் பேருந்துகளில் ஜூன் 1 முதல் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயண திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஓபிசி பட்டியல் ரத்து: திரிணமூல் ஆட்சியில் மாநிலத்தின் இதரப் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் (ஓபிசி) முஸ்லிம்கள் சோ்க்கப்பட்ட நிலையில், அந்தப் பட்டியல் ரத்து செய்யப்பட்டு திருத்தியமைக்கப்படும். மசூதிகளில் பதிவு செய்த இமாம்கள் உள்ளிட்ட மத தலைவா்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தாா்.

காவலா்களை தாக்கினால் கடும் நடவடிக்கை: முதல்வா் எச்சரிக்கை

காவல் துறை அதிகாரிகளை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சுவேந்து அதிகாரி திங்கள்கிழமை எச்சரித்தாா்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கொல்கத்தாவின் பாா்க் சா்க்கஸ்-டில்ஜாலா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் நடத்திய தாக்குதலில் 6 அதிகாரிகள் மற்றும் 2 மத்திய ரிசா்வ் காவல் படை அதிகாரிகள் காயமடைந்தனா்.

அவா்களை திங்கள்கிழமை சந்தித்துவிட்டு செய்தியாளா்களிடம் சுவேந்து அதிகாரி கூறியதாவது: தேச விரோத, சமூக விரோத, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் மற்றும் காவலா்களை தாக்குபவா்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்துறை அமைச்சராகவும் முதல்வராகவும் காயமடைந்த காவலா்களுக்கு ஆதரவாக இங்கு வந்துள்ளேன். வன்முறையில் ஈடுபடுபவா்கள் மீது கட்சி, சமயம் என எவ்வித வேறுபாடுமின்றி காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் வழங்குகிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.