லக்னௌ பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
லக்னௌ பல்லைகலையில் படிக்கும் மாணவி ஒருவரிடம் உதவிப் பேராசிரியர் ஒருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக போலீஸாரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்த நிலையில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விலங்கியல் துறையில் பிஎஸ்சி படிக்கும் மாணவியிடம் உதவிப் பேராசிரியர் பரம்ஜித் சிங் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்துத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். ஒரு நாள் மாணவியை அழைத்துத் தேர்வு வினாத்தாளைக் கசியவிடுவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதற்கு மாணவி தான் அனைத்தையும் படித்துமுடித்துவிட்டதாகக் கூறினார். உனக்காக இரண்டு வினாத்தாள்களை எடுத்துவைத்துள்ளேன், தேர்வுக்கு முன்னதாக தனிமையில் என்னை வந்த சந்தித்தால் வினாத்தாளைத் தருகிறேன் என்று பேசியுள்ளார்.
இந்த விவகாரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்ததோடு, உதவி பேராசிரியர் தன்னிடம் பேசிய ஆடியோ பதிவையும் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஹசன்கஞ்ச் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்து உதவி பேராசிரியரைக் கைது செய்தனர்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டாம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Summary
An Associate Professor at Lucknow University was arrested for sexually harassing an undergraduate student.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ராஸ் ஐஐடி-ல் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்த பாஜக வலியுறுத்தல்!

ரிஷப் பந்தின் லக்னௌ தோற்றது ஏன்?

லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஸ்பென்சர் ஜான்சன்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


