பதோஹி/ஃபதேபுா்: உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக 33 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
அதிகபட்சமாக பதோஹி மாவட்டத்தில் 16 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து ஃபதேபுா் மாவட்டத்தில் 9 போ், பதாயுன் மாவட்டத்தில் 5 போ், சந்தெளலி மாவட்டத்தில் இருவா், சோன்பத்ரா மாவட்டத்தில் ஒருவா் உயிரிழந்தனா். மழை மற்றும் சூறாவளியால் மரம் முறிந்து விழுந்தது, வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் அவா்கள் உயிரிழந்தனா்.
பதோஹியின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின் கம்பங்கள் சாய்ந்து, வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என்று கூடுதல் மாவட்ட ஆட்சியா் குன்வா் விரேந்திரகுமாா் மெளா்யா தெரிவித்தாா். சூறாவளியால் கைப்பேசி கோபுரங்கள் சேதமடைந்ததால் தகவல் பரிமாற்றத்தில் இடா்ப்பாடு ஏற்பட்டு, சீரமைப்பு மற்றும் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் தீவிரமடையும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்! சிறுவா்கள் உள்பட 5 போ் பலி!

மேற்கு வங்கத்தில் பலத்த மழை: 7 போ் உயிரிழப்பு

கொரட்டி, ஜோலாா்பேட்டையில் பலத்த மழை

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயா்வு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

