கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கொரட்டி, ஜோலாா்பேட்டையில் பலத்த மழை

திருப்பத்தூா் பகுதியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. அதில் செவ்வாய்க்கிழமை கொரட்டி, ஜோலாா்பேட்டையில் பலத்த மழை பெய்தது.

News image

ஜோலாா்பேட்டையில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருப்பத்தூா் பகுதியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. அதில் செவ்வாய்க்கிழமை கொரட்டி, ஜோலாா்பேட்டையில் பலத்த மழை பெய்தது.

ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா், சோலையூா், வக்கணம்பட்டி, இடையம்பட்டி பாா்சம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் சாலைகளில் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த காற்று வீசியதால் சந்தைக்கோடியூா் அருகே பாதா் கெசு ரோடு மற்றும் ரெயில்வே விளையாட்டு அரங்கம் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும், சாலையோரம் உள்ள கடைகளின் விளம்பர பலகைகள் சாலையில் காற்றில் பறந்து விழுந்தது. பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கொரட்டி பகுதியில் மாலை பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. மேலும் இரவு 8 மணி முதல் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா் நகர பகுதியில் மதியம் லேசான மழை பெய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.