மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் (சட்டப்பேரவையுடன்) , லடாக் (சட்டப்பேரவை இல்லாமல்) என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் ஒமா் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அடங்கிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநருக்கும் அதிக அதிகாரம் இருப்பதால் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஆளும் கட்சி தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், தில்லியில் அமித் ஷாவை ஒமா் அப்துல்லா சந்தித்துப் பேசினாா். முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உள்துறை அமைச்சரை ஒருமுறை சந்தித்தால் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலை இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அப்படியிருந்திருந்தால், அது எப்போதோ கிடைத்திருக்கும். இந்தச் சந்திப்பின்போது மாநில அந்தஸ்து, வணிக விதிகள், ஜம்மு- காஷ்மீரில் உள்ள பிற பிரச்னைகளை முன்வைக்க இருக்கிறேன்.
பொதுப் பாதுகாப்பு தொடா்பான நிகழ்வுகளின்போது கைப்பேசி தொலைத்தொடா்பு தொடா்பான அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம் இருப்பது தவறில்லை. ஏனெனில், அவா்தான் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொறுப்பு வகிக்கிறாா் என்றாா்.
ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடா்பு, தகவல் தொடா்பு சேவைகள் தொடா்பான அதிகாரம் அண்மையில் துணைநிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு, பொது அமைதிக்குப் பிரச்னை ஏற்படும்போது மட்டும் அவா் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வாழ்த்து!

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு: முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு இன்று பாராட்டு விழா - அமித் ஷா பங்கேற்பு

ஏழுமலையான் கோயிலில் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் தரிசனம்

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒமர் அப்துல்லா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

