தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நீட் வினாத்தாள் கசிவு: சிபிஐ வழக்குப் பதிவு!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image

நீட் தேர்வு எழுத வரிசையில் காத்திருந்த மாணவிகள் - பிடிஐ (கோப்புப் படம்)

Updated On :12 மே 2026, 7:26 pm IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரத்தில் ஆயுர்வேத மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 551 நகரங்களில் மே 3 ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. வெளிநாட்டிலும் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதனால் நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் 7 முதல் 10 நாள்களுக்குள் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்தார்.

நீட் வினாத்தாள் கசிந்தது எப்படி?

மாதிரி வினாத்தாள் என்ற பெயரில் கையால் எழுதப்பட்ட ஒரு வினாத்தாள் தேர்வுக்கு சரியாக 42 மணி நேரத்துக்கு முன்பு வாட்ஸ்ஆப்களில் பரவியுள்ளது. அதில் இருந்த 120 கேள்விகள் நீட் வினாத்தாளிலும் இடம்பெற்றிருந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது.

Summary

CBI registers case in alleged paper leak of NEET (UG) 2026 exam held on May 3

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.