தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நீட் மறுதேர்வு எப்போது? - என்டிஏ இயக்குநர்

நீட் மறுதேர்வு எப்போது நடத்தப்படும் என்று என்டிஏ இயக்குநர் தெரிவித்தது குறித்து...

News image

தேசிய தேர்வு முகமை இயக்குநர் அபிஷேக் சிங் - ANI

Updated On :12 மே 2026, 6:43 pm IST

நீட் மறுதேர்வுக்கான தேதி மற்றும் அட்டவணை சில நாள்களில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இயக்குநர் அபிஷேக் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்தன.

அதாவது, நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது.

இந்த நிலையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை இன்று (மே 12) அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அபிஷேக் சிங் தெரிவித்ததாவது:

“நீட் மறுதேர்வு குறித்து எங்களுடைய குழுவுடன் கலந்தாலோசிக்க உள்ளேன். சில நாள்களில் மறுதேர்வுக்கான தேதி மற்றும் முழு அட்டவணை வெளியிடப்படும். மருத்துவ கல்லூரிக்கான கல்வி ஆண்டு அட்டவணை மற்றும் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணைக்கு இடையூறு ஏற்படாத வகையில், தேர்வை முடிந்தவரை குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க திட்டமிடுவோம். அடுத்த ஏழு முதல் பத்து நாள்களுக்குள் இதற்கான செயல்முறைகள் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

Summary

Abhishek Singh, Director of the National Testing Agency (NTA), stated on that the date and schedule for the NEET re-examination will be released within a few days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.