காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தர பிரதேச நீதிமன்றம் இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய வகையில் விமா்சித்ததாக பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா என்பவரால் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சரணடைந்து ராகுல் காந்தி ஜாமீன் பெற்றாா்.
நீதிமன்றத்தில் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் ஆஜராகி விளக்கமளித்த ராகுல் காந்தி, தான் நிரபராதி எனவும், தனக்கு எதிராக அரசியல் காரணத்துக்காக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தாா். இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிரான குற்றச்சாட்டுக்குத் தேவையான ஆதாரத்தை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு நீதிமன்றம் ஆணையிட்டது.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், ஆதலால் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்கும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று, மனுதாரருக்கு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய சுல்தான்பூா் நீதிமன்றம் இறுதி வாய்ப்பு கொடுத்தது. அத்துடன், வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 21-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மென்பொறியாளா் கொலை வழக்கு: பெண் எஸ்.ஐ.யின் பிணை மனு ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 13-க்கு உ.பி. நீதிமன்றம் ஒத்திவைப்பு
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு: மே 2-இல் தீா்ப்பளிக்கிறது உ.பி. நீதிமன்றம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
